புகழுக்காக சினிமா நடிகைகளை தவறாக சித்தரிப்பது தவறு – கவிஞர் வைரமுத்துவின் அதிரடி பேச்சு

Cinema News It is wrong to misrepresent film actresses for fame Poet Vairamuthus action speech

சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை வளாகத்தில் கவிஞர் செந்தமிழ் தேனீ எழுதிய “சேலத்திற்குப் பெருமை சேர்க்கும் பெருமைக்குரியவர்கள்” என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து விருதினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் கவிஞர் வைரமுத்து. அப்பொழுது செய்தியாளர் ஒருவர் அவரிடம் டீப்-பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகளை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் தெரிவித்த வைரமுத்து, தொழிநுட்பத்தை பயன்படுத்தி இதுபோன்ற செயல்களை செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அது பெண்களை இழிவுப்படுத்த கூடிய செயலாக நான் கருதுகிறேன். அதிலும் குறிப்பாக சினிமாத் துறையில் நடிக்கும் நடிகைகளுக்கு இது ஒரு தலைகுனிவாக செயலாக நினைக்கிறன். தற்பொழுது கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் அதற்கான எதிர் வினை உள்ளது.

ALSO READ : மகளிர் உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கு புதிய திட்டம்..! வங்கி வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!!

செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய தொழில்நுட்பம் உருவாவது மனித குளத்தின் வளர்ச்சி என்று சொன்னாலும், ஒரு சிலர் அதில் இருக்கம் தீய உள்ளடக்கத்தை கண்டறிந்து அதனை செயல்படுத்தி வருகின்றனர். ஒருவருக்கு புகழ் என்பது நல்ல முயற்சிகளால் மட்டுமே வர வேண்டும். அவை தீய செயல்களால் வர கூடாது. நல்ல செயல்களால் வருவது புகழ். தீய செயல்களால் வருவது விளம்பரம். எனவே விளம்பரம் வேண்டாம் புகழை தேடுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top