
தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜிகர்தண்டா” என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹா வில்லனா நடித்து இப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்றார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலையும் அள்ளி குவித்தது. ஜிகர்தாண்டா திரைப்படம் வெளியாகி இதுவரை 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு திரையிட உள்ளது.
“ஜிகர்தண்டா 2 ” படத்தையும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் இயக்கியுள்ளார். இப்படத்தில், ஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைகிறார். இந்நிலையில், “ஜிகர்தண்டா 2” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி(நாளை) தமிழ் திரையரங்களுகளில் வெளியிடப்பட உள்ளது.
ALSO READ : கில், சிராஜ் முதலிடம் : தரவரிசையில் கலக்கும் இந்திய அணி வீரர்கள்!
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த டிரைலரில் வரும் “தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோ” என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படக்குழு தற்பொழுது இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், “ஜிகர்தண்டா 2” படம் எவ்வாறு மேக்கிங் செய்யப்பட்டது என்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இனையததில் வைரலாகி வருகிறது.