லியோ பட வெற்றிவிழா! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! காவல்துறை அனுமதி!

Cinema News Leo film success Fans in celebration
லியோ பட வெற்றிவிழா

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில் வெளியான படம் லியோ. மேலும் இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் இந்த படமானது கடந்த 19 ஆம் தேதி வெளியானது. அதோடு பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் இடையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக மகத்தான சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “நா ரெடிதான் வரவா” பாடல் பிரபலமாகி உள்ளது. மேலும் லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்து உள்ளது. அதோடு மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 7 நாளில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளதாகப் படக்குழு அறிவித்தது.

இந்த வெற்றியை கொண்டாட வருகிற 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி இது தொடர்பாக தயாரிப்பாளர் லலித் குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு ஒன்றை அளித்தார். மேலும் அந்த மனுவில் விஜய்யும் இந்த விழாவில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ALSO READ : தமிழ் பைபிள் வசனங்கள்

மேலும் அந்த மனுவிற்கு போலீஸ் தரப்பில் விழாவில் முக்கிய பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள், மொத்தம் எத்தனை நபர்கள் வருகிறார்கள் எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பி பதில் கடிதம் அனுப்பியது. அதன் பிறகு பாதுகாப்புக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து லியோ பட வெற்றிவிழாவுக்கு காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 200-300 கார்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதித்தும், பேருந்துகளில் வர அனுமதி மறுக்கப்பட்டு, அனுமதித்த எண்ணிக்கையின் அடிப்படையிலே டிக்கெட்டுகளை விற்பனைசெய்ய வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை விதித்து உள்ளது. அதோடு நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதை தொடர்ந்து இன்று மாலை காவல்துறை சார்பில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விழா நடைபெறும் இடமானது விளையாட்டு மேம்பாட்டு மையத்திற்கு சொந்தமானது என்பதால் தடையில்லா சான்றிதழ் மட்டுமே தேவைப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்