
தமிழ் சினிமாவில் இளைய தளபதி நடித்து கடந்த மாதம் 19 ஆம் தேதி “லியோ” திரைப்படம் வெளியானது. கைதி, மாநகரம், விக்ரம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் “லியோ” திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் மெஹா ஹிட் கொடுத்த நிலையில், தற்பொழுது வெளியான லியோ திரைப்படமும் ஹிட் கொடுத்துள்ளது.
இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் இந்த படம் வெளியானது. லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளையும் தாண்டி இப்படம் வெளியாகி விமர்சன ரீதியில் மட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ALSO READ : நடிகர் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் புதிய அப்டேட்..!
கடந்த மாதம் வெளியான இப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் சுமார் 148 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. இதுவரைவில் இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.540 கோடிக்கு வசூல் செய்துள்ளது. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக லியோ படத்தின் வெற்றி விழா கடந்த நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர், விஜய், நடிகை திரிஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தற்பொழுது லியோ திரைப்படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூலாகி உள்ளது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை லியோ திரைப்படம் வெளிநாடுகளில் ரூ. 201 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.