
ஜோக்கர், குக்கூ, ஜிப்சி உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள இயக்குனர் ராஜி முருகன். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தற்பொழுது கார்த்தி நடிக்கும் “ஜப்பான்” திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு “ஜப்பான்” படம் நாளை(நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் காமெடியாகவும், ஆக்ஷன் நிறைந்த காட்சியாகவும் இருக்கும் என்பதால் இது முற்றிலும் என்டர்டெய்ன்மெண்ட் படமாக ரசிகர்களின் பாராட்டை பெரும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார்.
ALSO READ : 9 மில்லியனை கடந்து யூடியூபில் ட்ரெண்டாகி வரும் “தங்கலான்” படத்தின் டீசர்..!
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜப்பான் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், விஜய் மில்டன், பவா செல்லதுரை என பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியிட தயாராக இருப்பதால் இப்படத்தில் சிறப்பு காட்சி இடம்பெறுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், தற்பொழுது தமிழக அரசு “ஜப்பான்” படத்திற்கான சிறப்பு கட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 5 காட்சிகள் திரையிட வேண்டும் என்றும் இப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.