சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” படம் இன்று ரீ-ரிலீஸ்..! தியேட்டரையே அலறவிட்ட ரசிகர்களின் வீடியோ!!

Cinema News Tamil Suriya starrer Varanam Ayaar is re-released today

கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம்” திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இப்படத்தினை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யா அப்பா மற்றும் மகன் ஆகிய இரண்டு காதா பாத்திரங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அப்பாவுக்கு ஜோடியாக சிம்ரனும் மகனுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி மற்றும் திவ்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளோடு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சூர்யா நடித்திருக்கும் “வாரணம் ஆயிரம்” படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பாடல்களுக்கும் இன்று வரை அனைவரின் விருப்ப பாடலாக உள்ளது. அதிலும் குறிப்பாக ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’, ‘அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல’ போன்ற பாடல்கள் நம்மை காதலின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் அளவிற்கு அமைந்திருக்கும்.

ALSO READ : உலகின் மிகப்பெரிய அணு உலையில் குதித்து சாதனை புரிந்த இளைஞர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே முத்து, ஆளவந்தான் போன்ற பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், தற்பொழுது “வாரணம் ஆயிரம்” திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 15 ஆண்டுக்களுக்கு பின் “வாரணம் ஆயிரம் ” படம் பல்வேறு திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதலில் சென்னையில் மட்டும் வெளியான இந்த படம் ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்ததால் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளிலும் வெளியானது. இந்த படத்தின் பாடலுக்கு ரசிகர்கள் பலரும் வைப் செய்து வருகின்றனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top