“விஷால் 34” படத்தின் புதிய அப்டேட் – இன்று மாலை வெளியாகிறது

Cinema News Tamil Vishal 34 Movie New Update Released Tonight

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்பொழுது விஷால் நடிக்கும் புதிய படத்தையும் இயக்கி வருகிறார். இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் காம்போவில் வெளியான் தாமிரபரணி மற்றும் பூஜை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இவர்களின் காம்போவில் உருவாகி வரும் புதிய படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ALSO READ : பாக்ஸ் ஆபிஸை தெரிக்கவிட்ட “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம்..! புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு!!

நடிகர் விஷால் நடித்து வரும் புதிய படத்திற்கு “விஷால் 34” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய பிரலங்களும் நடித்து வருகின்றனர். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், “விஷால் 34” படத்தின் புதிய அப்டேட் இன்று(திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு எக்ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் தெரிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு வெளியானதை அடுத்து ரசிகர்கள் சிலர் படத்தின் பெயர் வெளியிடப்படலாம் என்றும் மற்றும் சிலர் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படலாம் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top