குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை நயன்தாரா! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!!

Cinema News Today Actress Nayanthara celebrated her birthday with her family

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா அவர்கள். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட பல்வேறு பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் பலவும் ஹிட் அடித்துள்ளதால் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நடிகை நயன்தாரா முதலிடத்தில் உள்ளார். சமீபத்தில் இந்தி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ” ஜவான்” படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் நடிகை நயன்தாரா இந்தி திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் நடித்த முதல் இந்தி திரைப்படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ALSO READ : IND Vs AUS : உலகக்கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி!

இந்நிலையில், நடிகை நயன்தார நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறு தொழில்களையும் தொடங்கியுள்ளார். நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரட்டை ஆண் குழைந்தைகள் உள்ளது. இதில் ஒரு குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்வேக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

இதையடுத்து, நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை நேற்று குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார். பிறந்த நாளை கொண்டாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகை நயன்தாரா, “நான் இதற்குமேல் அதிகமாக கேட்கமுடியாது. கடவுள் எனது வாழ்க்கையில் இந்த 3 ஆண்களை பரிசளித்திருக்கிறார். ஐ லவ் யு விக்கி, என் உயிர் மற்றும் உலக்” என பதிவிட்டுள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்