நரிக்குறவராக நடிக்கும் யோகிபாபு… படத்தின் பெயரை போஸ்டராக வெளியிட்ட படக்குழு!!

Cinema News Yogi Babu who is acting as a fox the film team released the name of the film as a poster

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் பிரபமாக இருப்பவர் நடிகர் யோகிபாபு அவர்கள். இவர் நல்ல நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இணைந்து நடித்த “கோலமாவு கோகிலா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான மண்டேலா, லக்கி மேன் உள்ளிட்ட படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

ALSO READ : வட்டார கல்வி அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு..!

இந்நிலையில், கே.வி கதிர்வேல் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் பெயரை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு “குருவிக்காரன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் யோகிபாபு நரிக்குறவராக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்த படம் தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் யோகிபாபு நடித்து வரும் “குருவிக்காரன்” படத்திற்கு ராக் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் தாயரித்து வருகிறது. மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். உண்மை சம்பவத்தை கொண்டு இப்படம் உருவாக்கப்படுவதாலும், யோகிபாபு நரிக்குறவர் வேடத்தில் நடிப்பதாலும் இந்த படத்தின் மேல் இருக்கும் எதிபார்ப்பு அதிகரித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top