“அஜயன் பாலாவின் மைலாஞ்சி” திரைப்படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா..!

Cinima News Ilayaraja to compose music for Ajayan Balas Mailanchi

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “ஆறு அத்தியாயம்” திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை தமிழ் திரையுலகில் திரைக்கதை எழுத்தாளராகவும் நடிகராகவும் உள்ள அஜயன் பாலா இயக்கியுள்ளார். அதன்பிறகு உருவாகியுள்ள “மைலாஞ்சி” என்ற திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக கன்னிமாடம் என்ற படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கோலிசோடா 2 படத்தில் நடித்த கிரிஷா நடித்து வருகிரார. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் முனீஷ்காந்த், தங்கதுரை, சிங்கம்பிலி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அஜயன் பாலா இயக்கி வரும் மைலாஞ்சி திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளராக இளையராஜாவும் ஒளிப்பதிவாளராக செழியனும் உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், “மைலாஞ்சி” என்ற இப்படத்தின் தலைப்பு “அஜயன் பாலாவின் மைலாஞ்சி” என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ : தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடி சரிவு..! இன்றைய விலை நிலவரம்…

இதுகுறித்து இயக்குனர் அஜயன் பாலா கூறுகையில், பத்து வருடங்களுக்கு முன் இதே தலைப்பில் ஒரு படம் வெளியான காரணத்தால் “மைலாஞ்சி என்ற எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த படம், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் குறித்தும் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்தும் மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. “அஜயன் பாலாவின் மைலாஞ்சி” திரைப்படம் காதலர்கள் தினமான பிப்ரவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்