மோகன்லால் நடிக்கும் “லூசிபர் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

Cinima News Mohanlal starrer Lucifer 2 first look poster released

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மோகன்லால். இவர் நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு “லூசிபர்” என்ற படம் வெளியானது. இந்த படம் முற்றிலும் அரசியல் சாராம்சம் கொண்ட படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியான 25 நாட்களிலேயே சுமார் 150 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி குவித்துள்ளது. லூசிபர் படத்தினை பிரபல கதாசிரியராக முரளி கோபி கதை எழுத பிரித்விராஜ் இயக்கியிருந்தார்.

ALSO READ : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் இடியுடன் கொட்டப்போகும் மழை..!

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் “லூசிபர் 2 எம்புரான்” என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்க உள்ளார். இந்த படத்திலும் மலையாள நடிகர் மோகன்லால் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கும் “லூசிபர் 2” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “லூசிபர் 2 எம்புரான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்