
கைதி, விக்ரம், மாநகரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து கடந்த மாதம் 19 ஆம் தேதி “லியோ” திரைப்படம் வெளியானது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லியோ திரைப்படம் பல்வேறு சிக்கல்களுக்கு இடையே வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் இந்த படம் வெளியானது. இப்படம் வெளியான முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது வரை இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.540 கோடிக்கு வசூல் செய்துள்ளது. லியோ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக கடந்த நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் “லியோ” திரைப்படத்தின் வெற்றி விழா நடத்தப்பட்டது. இந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ALSO READ : மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
இந்நிலையில், தற்பொழுது லியோ திரைப்படம் குறித்து படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் லியோ திரைப்படத்தின் 25 வது நாளை சாதனையை கொண்டாடும் விதமாக போஸ்டரை வெளியிட்டு அந்த போஸ்டரில் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.