தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டவரப்பட்ட ஒரு திட்டம் தான் “நான் முதல்வன்” திட்டம்.

இந்நிலையில், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களது உயர்கல்வியை தலைசிறந்த கல்லூரிகளில் பயில வழிகாட்டும் விதமாக தமிழகத்தில் உள்ள 1055 அரசு பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரிகளை பார்வையிட அழைத்து செல்லப்படுகின்றனர்.
Also Read : அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..! என்னன்னு தெரியுமா?
அதன்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகம், அமெரிக்கன் காலேஜ், மதுரை மருத்துவ கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளுக்கு நேற்று(ஆகஸ்ட் 16) முதல் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அழைத்து செல்லப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.