விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்! தங்களுடைய ஆதார் எண்ணை இணையத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்!

உதகை: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து வங்கி கணக்குடன் (BANK ACCOUNT) இணைக்க வேண்டுமென மாவாட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் அறிவுறுத்தியுள்ளார்.

Collector’s Instruction to Farmers! Register their Aadhaar Number Online Immediately!

Collector's Instruction to Farmers! Register their Aadhaar Number Online Immediately!

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளதாவது:

இந்தியாவில் விவசாயிகளின் நலன் கருதி பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து, ஆதார், வங்கி விவரங்கள், நில விவரங்களை பதிவேற்றம் செய்த பின்பு மூன்று தவணைகளாக ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் விவசாயிகளுடைய வங்கி கணக்கை அடிப்படையாக கொண்டு நிதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த வருடம் முதல் பதியப்பட்ட விவசாயிகளின் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு தவணை நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து, வங்கிக் கணக்குடன் இணைத்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.


TODAY’S GOVERNMENT JOBS 2022:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here