பந்தை தெறிக்கவிட்ட நகைச்சுவை நடிகர் யோகிபாபு..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Comedian Yogi Babu who has splashed the ball Video going viral on the internet

முந்தைய காலத்தில் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வடிவேல், செந்தில், கவுன்டமணி ஆகியோர் வளம் வந்தனர். அந்த வகையில், தற்பொழுது யோகி பாபு அவர்களின் காமெடி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க செய்யும் அளவிற்கு இருக்கும்.

யோகி பாபு அவர்கள் முதலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறிய கதாபாத்திரத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், மான் கராத்தே, யாமிருக்க பயமேன் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவரது நகைச்சுவை என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கிரிக்கெட் விளையாட்டிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தற்பொழுது அவர் வெளியிட்ட வீடியோவில் கிரிக்கெட் பந்தை தெரிக்கவிடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை யோகி பாபு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

RECENT POSTS IN JOBSTAMIL.IN