சித்த மருத்துவர் ஷர்மிகா மீது புகார்..! இந்திய மருத்துவ இயக்குனரகம் விடுத்த நோட்டிஸ்!

Complaint against Siddha doctor Sharmika.. Notice issued by the Indian Medical Directorate-Sidha Doctor Sharmika Details

டாக்டர் ஷர்மிகா என்பவர் சித்த மருத்துவம் பயின்று தற்பொழுது சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தற்பொழுது சோஷியல் மீடியாவில் டாக்டர் ஷர்மிகா சொல்லும் உடல் நலத்திற்காக சொல்லும் டிப்ஸ் தற்பொழுது பிரபலமாகி வருகிறது. அந்த அளவிற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நாம் எப்படி ஆரோக்கியமாக இருப்பது மற்றும் எப்படி நம் உடலை பாதுகாப்பாக பார்த்து கொள்வது போன்ற டிப்ஸ்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், டாக்டர் ஷர்மிகா கூறும் மருத்துவ ஆலோசனைகள் தவறானது என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. குலோப்ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் போன்ற தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய மருத்துவ இயக்குனரகம் சித்த மருத்துவர் ஷர்மிகா வெளியிட்ட இந்த கருத்துக்களுக்கு விளக்கம் அளிகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த கருத்துகளுக்கான விளக்கம் 15 நாட்களுக்குள் அளிக்கமாறு கூறப்படுகிறது. மேலும், சித்த மருத்துவர் ஷர்மிகா இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

RECENT POSTS IN JOBSATAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here