இன்று தொடர்ந்து பெய்த மழை…! இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான ஆட்டம் ரத்து!

0
Continuous rain today India-New Zealand match cancelled-In Rain To Canceled Match Tomorrow

முதலாவது டி20 போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் பகுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மொத உள்ளன. இந்நிலையில், வெலிங்டனில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கைவிடப்பட்டது.

இன்று நடைபெற உள்ள முதலாவது டி20 போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரரான ஹர்திக் பாண்டியா உள்ளார்.

இந்திய அணியில் தற்பொழுது இளம் வீரர்கள் மட்டுமே உள்ள நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கலமிறங்குகிறது இந்திய அணி. இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெற இருந்த முதலாவது டி20 போட்டியானது மழையின் காரணமாக ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெறும் டி20 போட்டியில் இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் வெலிங்டனில் மழை பெய்து வரும் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மழை தொடர்ந்து பெய்து வரும் காரணமாக போட்டி ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இரு அணிகள் மோதும் அடுத்த டி20 போட்டி வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here