இந்தியாவில் மீண்டும் கொரோனா! 1,326 பேருக்கு பாதிப்பு உறுதி…

Corona again in India 1,326 people are confirmed to be affected-Covid 19 Case Reports

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில், தற்பொழுது கொரோனா பாதிப்பு சற்று குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தி 326 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,723 என கூறப்படுகிறது.

கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

1. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை – 4 கோடியே 46 லட்சத்து 53 ஆயிரத்து 592.

2. கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை – 4 கோடியே 41 லட்சத்து 06 ஆயிரத்து 656.

3. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை – 17 ஆயிரத்து 912.

4. கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை- 5 லட்சத்து 29 ஆயிரத்து 024.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here