கொரோனா வைரஸ் (COVID-19) தகவல்கள் உடனுக்குடன் தமிழில்

corona update

கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த உதவுங்கள்

 

கொரோனா வைரஸில் இருந்து பாதுக்காக்கும் முறைகள்:

தினமும் இந்த 5 முறைகளை செய்யுங்கள்:

1. கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தூய்மையான நீரின் மூலம் கழுவ வேண்டும்.
2. தும்மல் வரும்போது கைக்குட்டை அல்லது கைகள் மூலம் மூக்கை மூடி தும்பவும்.
3. அடிக்கடி முகத்தை தொடவேண்டாம்.
4. பாதுகாப்பான இடைவெளி தூரத்தை வைத்திருங்கள் (உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில்)
5. உடம்பு சரியில்லையா? மருத்துவரை அணுகவும்.

பொறுப்புத் துறப்பு: இது அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளம் அல்ல. பல்வேறு விதமான தகவல்களை சேகரித்து இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். மேலும் எங்களால் முடிந்தவரையில் உண்மையை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து வழங்க கடமைப் பட்டிருக்கிறோம். jobstamil.in இணைதளம் வேலைவாய்ப்பு தகவல்களை மட்டுமே அளித்து வரும் இணையதளமாகும். தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மனித நேயத்தோடு சேவை அளிக்கும் நோக்கத்தில் பதிவேற்றப்படுகிறது.  எனவே தவறாக பகிரப்படும் எந்த ஒரு கருத்திற்கும் jobstamil.in இணைதளம் பொறுப்பு ஏற்காது.
கொரோனா வைரஸால் எந்த ஒரு நபரும் பாதிப்படைய கூடாது என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம். corona virus in tamilnadu

 

தமிழ்நாடு அரசால் வெளிடப்படும் அறிவிப்புகளை நேரடியாக அறிய இங்கு கிளிக் செய்யவும்.

12/04/2020:

 

 

corona virus tamil

 

22/03/20

சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு

வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு 31.3.2020 வரை தடை !!

20/03/20

மக்கள் ஊரடங்கு’… கோயம்பேடு மார்கெட் ஞாயிறு அன்று மூடல்

19/03/20

கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸின் பாதிப்பை விட கொரோனா வைரஸை பற்றி பரவும் வதந்திகளே மக்களை இன்னும் பீதி அடைய செய்கின்றன. உண்மை நிலவரங்கள் என்ன என்பதை ஆராயாமலே சமூக ஊடகங்களில் பரப்பி விடுகின்றனர். இதனால் மக்கள் இன்னும் அதிகமான அச்சம் அடைகின்றனர். கொரோனா வைரஸை பற்றி வதந்தி பரப்புவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பற்றிய பீதி மற்றும் வதந்திகளைக் குறைக்கும் நோக்கத்துடன், சரியான தகவல்களை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த பக்கத்தை உருவாக்கி இருக்கிறோம்.

நாங்கள் MoHFW என்ற  அரசாங்க வலைத்தளம் மற்றும் பிற வலைத்தளங்கலிலிருந்து தகவல்களை திரட்டுகிறோம். இந்த பக்கத்தில் கொடுக்கப்படும் ஒவ்வொரு தகவல்களையும், உறுதி செய்யப்பட்ட பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறோம். தகவல்களை விரைவாக புதுப்பிக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். 

இந்த முயற்சியில் எங்களுடன் சேர்ந்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். 

  • தகவல்கள் மீண்டும் சரிபார்க்க எங்களுக்கு உதவுங்கள்
  • உங்கள் அருகிலுள்ள பாதிக்கப்பட்ட அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு அனுப்புங்கள்
  • பிழைகள் அல்லது சிக்கல்களைப் புகாரளித்தல்
  • பாதுகாப்பு பற்றிய கவலைகள் ஏதேனும் இருந்தால் அறிவித்தல்
  • உங்களுடைய கருத்து மற்றும் பரிந்துரைகளை அனுப்புங்கள்

தேவைகள் இருப்பின் admin@jobstamil.in என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் .

பொறுப்புத் துறப்பு: இது அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளம் அல்ல. பல்வேறு விதமான தகவல்களை சேகரித்து இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். மேலும் எங்களால் முடிந்தவரையில் உண்மையை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து வழங்க கடமைப் பட்டிருக்கிறோம். jobstamil.in இணைதளம் வேலைவாய்ப்பு தகவல்களை மட்டுமே அளித்து வரும் இணையதளமாகும். தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மனித நேயத்தோடு சேவை அளிக்கும் நோக்கத்தில் பதிவேற்றப்படுகிறது. மேலும் எந்த ஒரு வியாபார மற்றும் தனிமனித பலனும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு, இந்த பக்கத்தில் மட்டும் விளம்பரங்களை நிறுத்தியுளோம் . எனவே தவறாக பகிரப்படும் எந்த ஒரு கருத்திற்கும் jobstamil.in இணைதளம் பொறுப்பு ஏற்காது.
கொரோனா வைரஸால் எந்த ஒரு நபரும் பாதிப்படைய கூடாது என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

நன்றி!!!

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும். சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு, இன்று பல நாடுகளுக்கு பரவி உள்ளது. இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ்

நோயின் அறிகுறிகள்:

காய்ச்சல்
இருமல்
உடல் சோர்வு
ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.

கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம்:

நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் காற்றில் கலந்த நீரின் மூலம், அருகில் உள்ளவர்களுக்கு நேரடியாக பரவுகிறது (<20%).

மேலும், இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய காற்று நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும் பொழுது கைகளில் கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன.

அவ்வாறு கிருமிகள் ஒட்டியுள்ள கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு, வாய் மற்றும் முகத்தைத் தொடும்போது இந்நோய் தொற்று ஏற்படுகிறது (>80%).

நோய் தடுப்பு நடவடிக்கைகள் : 

அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 20-30 விநாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவிற்கு வீட்டிற்க்குள் இருப்பதே பாதுகாப்பு.

சிகிச்சைகள் : காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பொதுமக்கள் கவனத்திற்கு: 

  • கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சீனா, ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, ஈரான் முதலிய நாடுகளுக்கு பயணம் செல்லுவதை தவிர்க்க வேண்டும்.
  •  இருமல், ஜலதோஷம் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்க வேண்டும்.
  • சமீபத்தில் வெளிநாடு பயணம் சென்று வந்தவர்கள் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும்.
  • முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • குறைந்தது 20-30 வினாடிகள் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

24 மணி நேர உதவி எண்:

104

 தொலைபேசி : 044 – 2951 0400/044 – 2951 0500
கைபேசி : 94443 40496/87544 48477

அவசர தொடர்பு எண்கள் (மாவட்ட வாரியாக):

வ.எண் மாவட்டம் அவசர எண் தொலைபேசி எண்
1 அரியலூர் 1077 04329-228709
2 சென்னை 1077 044-25243454
3 கோவை 1077 0422-2301114
4 கடலூர் 1077 04142-220700
5 தர்மபுரி 1077 04342-230562/234500
6 திண்டுக்கல் 1077 0451-2460320
7 ஈரோடு 1077 0424-2260211
8 காஞ்சீபுரம் 1077 044-27237107/27237207
9 கன்னியாகுமரி 1077 04652-231077
10 கரூர் 1077 04324-256306
11 கிருஷ்ணகிரி 1077 04343-234424
12 மதுரை 1077 0452-2546160
13 நாகப்பட்டினம் 1077 04365-252500
14 நாமக்கல் 1077 04286-281377
15 பெரம்பலூர் 1077 04328-224455
16 புதுக்கோட்டை 1077 04322-222207
17 ராமநாதபுரம் 1077 04567-230060
18 சேலம் 1077 0427-2452202
19 சிவகங்கை 1077 04575-246233
20 தஞ்சாவூர் 1077 04362-230121
21 நீலகிரி 1077 0423-2444012/2444013
22 தேனீ 1077 04546-261093
23 திருவள்ளூர் 1077 044-27664177/27666746
24 திருப்பூர் 1077 0421-2971199
25 திருவாரூர் 1077 04366-226623
26 தூத்துக்குடி 1077 0461-2340101
27 திருச்சி 1077 0431-2418995
28 திருநெல்வேலி 1077 0462-2501070/2501012
29 திருவண்ணாமலை 1077 04175-232377
30 வேலூர் 1077 0416-2258016
31 விழுப்புரம் 1077 04146-223265
32 விருதுநகர் 1077 04562-252601/252017
33 செங்கல்பட்டு 1077 044- 27237107/27237207
34 ராணிப்பேட்டை 1077 0416-2258016
35 திருப்பதூர் 1077 04179-222111
36 தென்காசி 1077 0462-2501070 /2501012
37 கள்ளக்குறிச்சி 1077 04146-223265

Source: http://stopcoronatn.in/whomtocontact.html

பத்திரிகை செய்தி:

Poster 1 Poster 2 Poster 3

படங்கள்:

Poster 1 Poster 2 Poster 3

வீடியோக்கள்:

Video 1 Video 2

Source: http://stopcoronatn.in/healthadvisory.html

கொரோனா வைரஸ் நோயின் அதிகாரப்பூர்வ பெயர் என்ன?

ஐ.சி.டி.வி (ICTV): 11 பிப்ரவரி 2020 அன்று புதிய வைரஸின் பெயராக “கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் 2 (SARS-CoV-2)” ஐ அறிவித்தது.

இருமல் கொரோனா வைரஸ் நோயின் அறிகுறியா?

COVID-19 இன் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் வறட்டு இருமல். சில நோயாளிகளுக்கு வலிகள் மற்றும் வலிகள், நாசி நெரிசல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் அல்லது வயிற்றுப்போக்கு இருக்கலாம். இந்த அறிகுறிகள் பொதுவாக லேசானவை மற்றும் படிப்படியாக தொடங்கும்.

கொரோனா வைரஸ் நோய் SARS க்கு சமமானதா?

இல்லை. COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் 2003 இல் கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) வெடித்ததற்கு காரணமானவை ஒருவருக்கொருவர் மரபணு ரீதியாக தொடர்புடையவை, ஆனால் அவை ஏற்படுத்தும் நோய்கள் முற்றிலும் வேறுபட்டவை.

கொரோனா வைரஸ் நோய்க்கான மீட்பு நேரம் என்ன?

கிடைக்கக்கூடிய பூர்வாங்கத் தரவைப் பயன்படுத்தி, லேசான நிகழ்வுகளுக்கான ஆரம்பத்திலிருந்து மருத்துவ மீட்புக்கான சராசரி நேரம் தோராயமாக 2 வாரங்கள் மற்றும் கடுமையான அல்லது சிக்கலான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 3-6 வாரங்கள் ஆகும்.

குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் நோய் வர முடியுமா?

எந்தவொரு வயதினருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் இதுவரை குழந்தைகளிடையே COVID-19 இன் வழக்குகள் மிகக் குறைவு.

கொரோனா வைரஸ் நோய் புதியதா?

கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய திரிபு மற்றும் இது முன்னர் மனிதர்களில் அடையாளம் காணப்படவில்லை.

இருமல் கொரோனா வைரஸ் நோயின் அறிகுறியா?

COVID-19 இன் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் வறட்டு இருமல். சில நோயாளிகளுக்கு வலிகள் மற்றும் வலிகள், நாசி நெரிசல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் அல்லது வயிற்றுப்போக்கு இருக்கலாம். இந்த அறிகுறிகள் பொதுவாக லேசானவை மற்றும் படிப்படியாக தொடங்கும்.

கொரோனா வைரஸ் நோய்க்கான சிகிச்சை என்ன?

கொரோனா வைரஸ் வவ்வாலால் ஏற்படும் நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், பல அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும், எனவே நோயாளியின் மருத்துவ நிலையின் அடிப்படையில் சிகிச்சை.

கொரோனா வைரஸ் நோய் எவ்வாறு பரவுகிறது?

புதிய கொரோனா வைரஸ் என்பது ஒரு சுவாச வைரஸ் ஆகும், இது முதன்மையாக பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது உருவாகும் நீர்த்துளிகள் மூலமாகவோ அல்லது உமிழ்நீர் துளிகள் மூலமாகவோ அல்லது மூக்கிலிருந்து வெளியேறும் மூலமாகவோ பரவுகிறது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஆல்கஹால் சார்ந்த கை தடவினால் உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும்.

கொரோனா வைரஸ் நோயின் அடைகாக்கும் காலம் என்ன?

“அடைகாக்கும் காலம்” என்பது வைரஸைப் பிடிப்பதற்கும் நோயின் அறிகுறிகளைக் காணத் தொடங்குவதற்கும் இடையிலான நேரம். COVID-19 க்கான அடைகாக்கும் காலத்தின் பெரும்பாலான மதிப்பீடுகள் 1-14 நாட்களிலிருந்து, பொதுவாக ஐந்து நாட்களில் இருக்கும். கூடுதல் தரவு கிடைக்கும்போது இந்த மதிப்பீடுகள் புதுப்பிக்கப்படும்.

கொரோனா வைரஸ் நோயின் அறிகுறி பரவுதல் உள்ளதா?

இருமல் உள்ள ஒருவரால் வெளியேற்றப்படும் சுவாச துளிகளால் நோய் பரவுவதற்கான முக்கிய வழி. அறிகுறிகள் இல்லாத ஒருவரிடமிருந்து COVID-19 ஐப் பிடிக்கும் ஆபத்து மிகக் குறைவு.