இந்த கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..! 50 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

Crowds of devotees flock to this temple Sami darshan after waiting for 50 hours

ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற கோவிலாக திருப்பதி எழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், தற்பொழுது கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, இலவச தரிசன டிக்கெட் பெற்று பெரும் பக்தர்கள் சுமார் 50 மணி நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ரூ.300 டிக்கட் பெற்று வரும் பக்தர்களும் சுமார் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சுழலல் ஏற்பட்டடுள்ளது.

இந்நிலையில், திருப்பதி மலைக்கு வந்து சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு உள்ள இரண்டு வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் உள்ள அனைத்து அறைகளிலும் நிரம்பி சாமி தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 8 கிலோமீட்டர் நீள வரிசையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே காத்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN