CSIR UGC NET Exam 2022 NTA Application Corrections: தேசிய தேர்வு முகமையானது இந்தியாவில் உள்ள பல்கலைகழகங்களில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் விரிவுரையாளர்/உதவி பேராசிரியர் பணிகளுக்கான தகுதித் தேர்வை நடத்துகிறது. அதன்படி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் NET தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துகிறது.
CSIR UGC NET exam 2022 NTA opens correction facility check how to make changes application
தற்போது நடைபெறவிருக்கும் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நிரப்பி முடிக்கப்பட்டு பதிவேற்றப்பட்ட நிலையில் NTA அமைப்பானது CSIR UGC NET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பப் படிவத்தில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதை சரி செய்ய மற்றும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வாய்ப்பின்படி விண்ணப்பதாரர்கள் தங்களின் CSIR UGC NET 2022 தேர்விற்க்கான விண்ணப்பங்களில் மாற்றங்களைச் செய்ய 19 ஆகஸ்ட் 2022 முதல் 23 ஆகஸ்ட் 2022 வரை கால அவகாசம் கொடுத்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் CSIR NET தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான csirnet.nta.nic.in இல் சென்று தங்கள் விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை திருத்தங்கள் செய்யலாம்.
CSIR UGC NET 2022: திருத்தங்களைச் செய்வது எப்படி?
- CSIR UGC NETயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும் — csirnet.nta.nic.in.
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘CSIR UGC NET 2022 தேர்வு திருத்தத்திற்கான’ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் விண்ணப்ப எண், கடவுச்சொல் மற்றும் பாதுகாப்பு பின்னை உள்ளிடவும்.
- தேவையான மாற்றங்களைச் அப்பக்கத்தில் செய்து படிவத்தைச் சேமிக்கவும்.
- இறுதியாக படிவத்தைச் சமர்ப்பிக்கும் முன்னர் ஒருமுறை நன்கு சரிபார்க்கவும்.
- ஆன்லைன் முறையில் மாற்றப்படும் அனைத்து திருத்தங்களுக்கும் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.
- CSIR UGC NET 2022 தேர்வு எழுத போகும் நகரம் மற்றும் தேர்வுக்கான தேதி தகவலை பிரிண்ட் அவுட் எடுத்துகொள்ளவும்.
CSIR NET 2022 தேர்வுப் படிவத்தில் திருத்த வேண்டிய விவரங்கள்:
CSIR UGC NET படிவத்தில் உள்ள சில விவரங்கள் மட்டுமே திருத்தம் செய்ய இயலும், அதில் சரி செய்யக்கூடிய விவரங்களின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
- வேட்பாளர் பெயர்:
- தந்தையின் பெயர்:
- தாயின் பெயர்:
- கல்வி விவரங்கள்:
- விண்ணப்பதாரரின் முகவரி:
- பாலினம்:
- பிறந்த தேதி:
- வகை:
- தேசியம்:
- மாற்றுத் திறனாளிகள் பிரிவு:
- எந்த பதவிக்கு விண்ணப்பித்தது:
- பாடங்கள் தேர்வு செய்தது:
- சிறப்பு:
- தேர்வு மைய விருப்பம்:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை வெற்றிகரமாகச் சமர்ப்பித்தவுடன், NTA ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அட்மிட் கார்டு வெளிவரும் என்று எதிர்ப் பார்க்கப் படுகிறது. தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
✅ Tamilnadu Government Jobs 2022:
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.
Trending Govt Jobs in Tamilnadu | 2021 |
---|
✅ For More Job Details:
கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2022). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!
district | district 2 |
---|
✅ Here are the links to always stay with Jobs Tamil:
இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!