தினமும் ஏலக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா…!

Daily Eating Cardamom There Are So Many Benefits In Tamil

நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் மசாலா வகையில் ஒன்றாக திகழ்வது ஏலக்காய். தேநீர் முதல் பல உணவு வகைகளில் ஏலக்காய் முக்கியமாக பயன்படுத்தபடுகிறது. ஏனெனில் அதில் உள்ள வாசனை அனைவரையும் கவரக்கூடியதாக இருக்கும்.

ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சார்ந்தது என்று கஊரப்படுகிறது. உணவை சுவையாக்குவது மட்டுமல்லாமல் பல நோய்களில் இருந்து காப்பாற்ற உதவுகிறது. வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சைனகள், விக்கல், தோல் நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்கிறது. எனவே ஏலக்காயில் உள்ள சத்துகள், சாப்பிடும் முறை மற்றும் அவற்றின் நன்மைகள் என அனைத்தையும் விரிவாக காண்போம்.

தினமும் ஏலக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா…!

ஏலக்காயில் காணப்படும் சத்துகள்:

Nutrients Found In Cardamom

ஏலக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், உணவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுகள் காணப்படுகின்றன. கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுகள் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகின்றன.

ஏலக்காய் உட்கொள்ளும் முறை:

Method of Consumption of Cardamom

ஏலக்காய் வாய் புத்துணர்ச்சியாக செயல்படுவதால், அதன் விதைகளை நேரடியாக மென்று சாப்பிடலாம். இதை தவிர டீயில் போட்டு குடிக்கலாம். ஏலக்காய் பொடி செய்து அதை தேனில் கலந்து சாப்பிடலாம். சாப்பிடும் உணவு வகையில் சிறிது ஏலக்காய் சேர்த்து கொள்ளலாம்.

ALSO READ >எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்!

ஏலக்காய் சாப்பிடுவதற்கான நேரம்:

Time to Eat Cardamom

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் உறங்குவதற்கு முன் மூன்று ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு அந்த தண்ணீரை குடித்தால் இயற்கையான தூக்கம் கிடைக்கும். இதனால் நல்ல உறக்கம், குறட்டை நீங்கும். இரும்பல், தொண்டை வலி இருக்கும் போது நான்கு ஏலக்காய் அத்துடன் சுக்கு சேர்த்து நீர் விட்டு அரைத்து சாப்பிட்டால் வலி போகும். இது மட்டுமல்லாமல் கேஸ், அசிடிட்டி, மலசிக்கல், வயிற்றுபிடிப்பு போன்ற தொல்லைகள் நீங்கும்.

ஏலக்காயில் உள்ள நன்மைகள்:

  • பருவ நிலை மாற்றத்தின் பொது சளி, இரும்பல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக ஏலக்காய் பயன்படுத்தபடுகிறது.
  • நீரழிவு நோய், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோய் உள்ளவர்களுக்கு பயன் தரும் வகையில் ஏலக்காய் அதிக நன்மையை தருகிறது.
  • ஜலதோசத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நல்ல நிவாரணமாக இருக்கும்.
  • தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் நல்ல பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
  • உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவற்றிக்கு நல்ல பலன் தருகிறது. மனபதட்டம், குமட்டலுக்கு உதவுகிறது. உடலின் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
  • ஏலக்காயில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்பு இதய ஆரோக்கித்தை மேம்படுத்தும். நார்ச்சத்து கொழுப்பை குறைக்க பயன்ப்படும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை சரி செய்யம் திறன் ஏலக்காய்க்கு உள்ளது.
  • இயற்கையாகவே ஏலக்காய் புற்றுநோய் குணப்படுத்தும் தன்மை கொண்டது. விலங்குகளின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் ஏலக்காய் புற்றுநோய் வராமல் தடுக்கவும், புற்றுநோய் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது.

RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here