10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்கான தேதி, நேரம், இணையதள முகவரி அறிவிப்பு..! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Date Time Website Address Notification for Class 10 General Examination Result Official notification issued by the Department of School Education released just now read it dont miss

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாததால் பல்வேறு தரப்பினர் மற்றும் மாணவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையடுத்து, தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 3 ஆயிரத்து 986 தேர்வு மையங்களில் தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள் மே 19 ஆம் தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரியையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் முடிவுகளை tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இனையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அதே நாளில் வெளியாக உள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN