புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்தார்!

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்தார்
புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்தார்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்களும் தயாராகி வருகின்றனர். முக்கியமான கடை வீதிகளில் தீபாவளி ஷாப்பிங் களைகட்டி வருகிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றவர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல தயாராகி வருகினறனர்.

இதனால், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் தற்பொழுது முதலே கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. தீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை என்பதால் வழக்கம் போல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவன பணியாளர்கள் என அனைவரும் மீண்டும் சொந்த ஊரிலிருந்து தீபாவளி அன்று இரவே திரும்ப வேண்டியுள்ளது.

ALSO READ : தீபாவளி 2023 : மூன்று நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை!

இதன் காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையில், தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூரிலிருந்து சொந்த ஊர் வந்தவர்கள் மீண்டும் வெளியூர் செல்ல வசதியாக தீபாவளிக்கு அடுத்த நாள் அதாவது திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு, தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவம்பர் 13 ஆம் தேதி பொதுவிடுமுறை என்று தமிழக அரசு அறிவித்தது.

தமிழகத்தை போலவே தற்பொழுது புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் புதுவையில் இருந்து தீபாவளி கொண்டாட வெளியூர் செல்பவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்