கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பல்வேறு தேர்தல் அறிக்கைகள் அறிவிக்கப்பட்டது. அதில், மகளிருக்கு இலவச பேருந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 போன்ற பல்வேறு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்பொழுது அமல்படுத்தப்படும் என்று அனைவரும் எதிபார்த்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்.
கடந்த மாதம் நடைபெற்ற தமிழக பட்ஜெட்டில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், அதில் தகுதியுடைய பெண்களுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 என்ற வார்த்தையும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், தகுதியுடைய பெண்கள் என்றால் அது யாரைகுறிக்கும் என்ற சந்தேகம் அனனைத்து பெண்களிடமும் அதிகரித்தது.
மேலும் இதுகுறித்து அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, வயதான பெண்கள், ஏற்கனவே அரசு உதவித்தொகை வாங்கும் பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், விதவை பெண்கள் ஆகியோருக்கு அரசின் மாதம் ரூ.1000 வழங்கப்படாது என்றும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தலைவிகளுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ரேஷன் கார்டு ரத்து பண்றாங்களா? உங்க ரேஷன் கார்ட பத்திரமா வச்சுக்கோங்க..!
- மத்திய அரசாங்க வேலை செய்ய ரெடியா இருங்க! நேரடி நேர்காணல் முறையில் வேலைவாய்ப்பு வெளியீடு!
- பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்ப முடிவு! AAICLAS லிமிடெட்டில் வேலை! மிஸ் பண்ணாதீங்க!
- நீங்கள் எதிர்ப்பார்த்த வேலை வந்துவிட்டது! RITES நிறுவனத்தில் புதியதோர் வேலை வெளியீடு!
- தமிழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு! திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை அறிவிப்பு!