தமிழ் அறிஞர் நெடுஞ்செழியன் மறைவு-அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

Death of Tamil scholar Nedunchezhiyan-Political party leaders condole-Death For Nedunchezhiyan

நெடுஞ்செழியன் என்பவர் திராவிட இயக்க பேச்சாளராகவும் மற்றும் தமிழ் அறிஞராகவும் திகழ்ந்து வந்தார். இவர் 1920 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி திருச்சியில் பிறந்தார். தற்பொழுது நெடுஞ்செழியன் அவர்கள் வயது முதிர்வால் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நெடுஞ்செழியன் உடல்நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான திருச்சிக்கு எடுத்து செல்லப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நெடுஞ்செழியன் உடலுக்கு பல்வேறு அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று நெடுஞ்செழியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நெடுஞ்செழியன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த இரங்கல் செய்தியில் திராவிட இயக்க பேச்சாளரும் தமிழ் அறிஞருமான நெடுஞ்செழியன் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். நெடுஞ்செழியனின் அறிவு நூல்கள் தமிழ் சமுதாயத்தை எந்நாளும் உணர்ச்சியூட்ட செய்யும். நெடுஞ்செழியனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here