200 வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியதா இந்தியா?

Did India gift 200 vehicles Indian Embassy Notice-India Donates 200 vehicles For Nepal

இந்தியாவின் அண்டை நாடக கருதப்படும் நேபாள நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. நேபாள நாட்டின் இந்திய தூதராக உறுப்பினராக நவீன் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளதால், நேபாள நிதி மந்திரி ஜனார்தன் சர்மாவிடம் இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா இந்தியா சார்பில் 200 வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதனை பற்றி இந்திய தூதரகம் தெரிவிக்கையில், நேபாள பொது தேர்தலின்போது போக்குவரத்து உள்ளிட்ட விசயங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் இந்த அன்பளிப்பை இந்தியா வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியா சார்பில் வழங்கிய மொத்தம் 200 வாகனங்களில் 120 வாகனங்கள் தேர்தல் நடக்கும் பொழுது அதற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் மீதமுள்ள 80 வாகனங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் இந்தியா சார்பில் நேபால் நாட்டிற்கு 2,200 வாகனங்கள் வழங்கப்பட்ட நிலையில் இந்த மாத இறுதியில் நடைபெறும் தேர்தல் காரணமாக இந்தியா சார்பில் மேலும் 200 வாகனங்கள் வழங்கப்பட்டது. இதனை காத்மண்டு நகரில் உள்ள நேபாளத்திற்கான இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here