இன்று நடந்த குரூப்-1 தேர்வில் இதனை சதவீதம் பேர் ஆப்சென்டா? அதிர்ச்சி தகவல்..!

0
Did the percentage of people absent in today's group-1 exam Shocking information-Group 1 Exam 40 Candidates Are Absent

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தமிழ் நாட்டில் உள்ள அரசு காலிபனியிடங்களை நிரப்ப உள்ளதாக உள தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ் நாட்டில் மொத்தம் 92 அரசு காலிபனியிடங்களில் 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தபப்டுகிறது.

இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட குரூப்-1 தேர்வு இன்று(சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 1,31,457 பேர் தேர்வெழுத வரவில்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 1,90,957 பேர் மட்டுமே குரூப் 1 தேர்வெழுத வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 40 சதவீதம் பேர் தேர்வெழுத வரவில்லை.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here