வாட்ஸ்அப்ல தப்பா மெசேஜ் பண்ணிட்டீங்களா? கவலையே படாதீங்க… WhatsApp-யின் கலக்கலான புதிய அப்டேட்!

0

WhatsApp’s Exciting New Update 2022: உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மெட்டா நிறுவனத்தின் மிக முக்கியமான வாட்ஸ் அப் (WhatsApp) செயலில் சமீபக்காலத்தில் பல புதிய அப்டேட்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இந்த செயலியை பயன் படுத்தும் பயனர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள வாட்ஸ் அப் பற்றிய அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

WhatsApp users attention important news! WhatsApp’s Exciting New Update 2022

Don't worry... WhatsApp's exciting new update Avatar
Don’t worry… WhatsApp’s exciting new update Avatar

WhatsApp-யில் வரவிருக்கும் புதிய மெசேஜ் எடிட் அப்டேட்

உலகத்தின் எந்த இடத்தில் இருந்தும் செய்தி பரிமாறும் (அனுப்ப/பெற) எளியமையான செயலியாக உள்ளது. தற்போது பயனாளர்களுக்கு எளிதாகவும், பல வசதிகள் இருக்கும் வகையில் புதிய அப்டேட்களை WhatsApp தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இப்போது வெளிவந்த அறிவிப்பில் வாட்ஸ்அப் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை புதிதாக அறிமுகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக, WABetaInfo அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு பீட்டா வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிடுகிறது, இதில் செய்திகளைத் திருத்தும் வசதி அதாவது மெசேஜ் எடிட் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது இந்த வசதி சோதனைக் கட்டத்தில் உள்ளதாகவும், பீட்டா பயனர்களுக்கு கூட இன்னும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப்பில் செய்திகளை எடிட் செய்யும் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பான 2.22.20.12 ல் வெளியிடப்படும். மெசேஜ்களை அனுப்பிய பிறகு எவ்வளவு விரைவில் அல்லது எப்போது எடிட் செய்ய முடியும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வாட்ஸ்அப் -யின் புதிய அவதார் ஸ்டிக்கர் அப்டேட்

வாட்ஸ்அப்-யின் மற்றுமொரு அப்டேட்யில் பயனாளர்கள் தங்கள் முகத்தை பொம்மை உருவத்தில் காட்சியளிக்கும் வகையில் புதிய அவதார் மற்றும் ஸ்டிக்கர் பேக்கில் சில மாற்றங்கள் கொண்டுவரவுள்ளது. இந்த அவதார் உருவம் வீடியோ அழைப்புகளின் போது ஒரு முகமூடியாகவும், எதிர்காலத்தில் ஸ்டிக்கராகவும் அவதாரைப் பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் உங்கள் சாட்டிங் மற்றும் குழுக்களுடன் நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உங்கள் தனிப்பட்ட ஸ்டிக்கர்களைப் பகிரலாம். கூடுதல் அம்சமாக, எதிர்காலத்தில் அவதாரத்தை சுயவிவரப் (DP) புகைப்படமாகவும் பயன்படுத்த முடியும்.


மேலும் பல புதிய தகவல்களை அப்டேட் செய்யப்படும் தொடர்ந்து இணைந்திருங்கள் இது உங்கள் ஜாப்ஸ் தமிழ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here