கேஸ் சிலிண்டர் யூஸ் பன்றீங்களா? இன்னைக்கு வந்த முக்கிய செய்தி என்னென்னு தெரியுமா?

0
Did you use a gas cylinder Do you know what the big news is today-LPG Cylinders To Come With QR Codes

நம் அன்றாட வாழ்வில் அனைவரும் கேஸ் சிலிண்டரை பலவித வேலைகளுக்காக பயன்படுத்தி வருகிறனர். அந்த வகையில் தற்பொழுது LPG சிலிண்டரை பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இனி LPG கேஸ் சிலிண்டரில் QR குறியீடு பொறுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பினை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கேஸ் சிலிண்டரை கண்காணிக்கவும் டிரேஸ் செய்யவும் முடியும். இந்த புதிய நடைமுறையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து வீட்டு எரிவாயு சிலிண்டர்களிலும் QR குறியீடு இருக்கும் என்று கூறினார்.

LPG கேஸ் சிலிண்டரில் QR குறியீட்டு முறையானது ஒரு புதிய அம்சம் என்றும் இது ஒரு புரட்சிகரமான மாற்றம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார். இதை பற்றின ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், LPG கேஸ் சிலிண்டரில் உள்ள QR குறியீடை ஸ்கேன் செய்வதன் மூலம் சிலிண்டர் எங்கு நிரப்பப்பட்டது மற்றும் சிலிண்டர் தொடர்பான பாதுகாப்பு சோதனைகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன ஆகிய தகவல்களை பெற முடியும். இந்த நடைமுறை தற்பொழுது லேபிள் மூலம் QR குறியீடு ஒட்டப்படும் அதன்பின் புதிய சிலிண்டரில் வெல்டிங் செய்யப்படும். இந்நிலையில், தற்பொழுது வரை 20,000 QR குறியீடுகள் பதிக்கப்பட்ட எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here