சென்னை NIE நிறுவனத்தில் 12வது படிச்சவங்களுக்கு வேலை! இண்டர்வியூ அட்டன் பண்ண ரெடியா நீங்க?

சென்னை NIE நிறுவனத்தில் 12வது படிச்சவங்களுக்கு வேலை
சென்னை NIE நிறுவனத்தில் 12வது படிச்சவங்களுக்கு வேலை

ICMR-NIE: தேசிய தொற்று நோயியல் (NIE) நிறுவனம் SRF, Medical Officer, Field Worker பணிக்கு தங்களை விண்ணப்பிக்க அழைக்கிறது. மொத்தம் 25 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர் Walk-IN இன்டர்வியூ செல்ல வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் வேலை செய்யும் இடம் சென்னை ஆகும். விருப்பம் உள்ளவர்கள் 12th, B.Sc, BA, BDS, DMLT, M.Sc, MA, MBBS, Nursing போன்ற பட்டங்களில் எதாவது ஒன்றினை அந்தந்த பணிக்கு தகுந்தவாறு பெற்றிருக்க வேண்டும்.

ALSO READ : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் (TNRD) வேலை! எட்டாவது படித்திருந்தாலே விண்ணப்பிக்கலாம்!

மேலும் ஒவ்வொரு பணிகளுக்கும் தகுந்தவாறு மாத சம்பளம் ரூ. 18,000 முதல் ரூ. 60,000 வரை வழங்கப்படும். இப்பணிகளுக்கு நவம்பர் 28 முதல் நவம்பர் 30 வரை நேர்காணல் நடைபெறும். Medical Officer மற்றும் Field Worker பதவிக்கு அதிகபட்சம் வயது 30 ஆக இருக்க வேண்டும். SRF பணிக்கு அதிகபட்சம் வயது 35 ஆக இருக்க வேண்டும். Walk-IN- Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணம் என்று எதுவும் இல்லை. விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து எடுத்துக்கொண்டு கீழ் காணும் முகவரிக்கு Interview-க்கு வரவும்.

முகவரி :

ICMR – National Institute of Epidemiology,
R-127,
Second Main Road,
Tamil Nadu Housing Board,
Ayapakkam,
Chennai-600077.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள ICMR-NIE நிறுவனத்தின் Official Notification மற்றும் Official Website பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்