என்னது பிளாட்பாஃம் டிக்கெட்டுக்கு விலை குறச்சிடாங்களா? மகிழ்ச்சியில் பயணிகள்

Discount for my platform ticket Happy travelers-PlatForm Ticket Details

தீபாவளி பண்டிகை கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்பட்டதால், வெளிநாட்டில் அல்லது வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்தனர். இந்நிலையில், இந்த பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் அதிக கூட்டம் காணப்படும் இடமான 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டது.

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக உயர்த்தப்பட்ட நடைமேடை டிக்கெட் கட்டணம் அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, பண்டிகை காலம் முடிவடைந்த நிலையில் சென்னை சென்டிரல், எழும்பூர் ,தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் குறைக்கபப்ட்டுள்ளது. இந்த நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here