தை பிறந்தாள் வழிபிறக்கும் என்ற பழமொழியை பலரும் சொல்லி கேள்விபட்டிருப்போம். அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் காலையில் பொங்கல் வைத்து இறைவனை வழிபடுவது வழக்கம். அதிலும் மாட்டு பொங்கல் (Mattu Pongal 2023) என்றாலே விவசாயிகள் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றே கூறலாம்.
பொதுவாக பொங்கல் என்றாலே காலையில் எழுந்து பொங்கல் வைத்து சூரியன் உதயமாகும் போது இறைவனை வழிபடுவது வழக்கம். ஆனால் மாட்டு பொங்கல் அன்று மட்டும் ஏன் மாலை நேரங்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள் தெரியுமா? அதற்கு கரரணம் உண்டு.
காலையில் கண்ணன் அனைத்து பசுக்களையும் பிருந்தாவனத்திற்கு மேய்ச்சலுக்காக ஓட்டி செல்வார். மேய்ச்சல் முடிந்த பிறகு மாலையில் அவர் கையில் இருக்கும் குழலை அழகாக ஊதியபடி வீட்டுக்கு திரும்பி வருவான். இதனால்தான் மாலை நேரங்களில் மாட்டுபொங்கல் வைக்கிறனர். மாட்டு பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளில் அழகாக வர்ணம் தீட்டி, மாட்டின் கழுத்தில் மணி மற்றும் வேட்டி கட்டி அந்த மாட்டிற்கு மேலும் அழகு சேர்ப்பர்.
மேலும், மாடுகள் கட்டப்பட்டிருக்கும் மாட்டு கொட்டலின் முன் பொங்கல் வைத்து அதனை அந்த மாட்டிற்கு படையல் போட்டு வழிபடுவது மட்டுமல்லாமல் பொங்கல் பானையிலிருந்து பொங்கி வரும்பொழுது ஒரு சிலர் பட்டிபெருக பால் பானை பொங்க என்றும் வேறு சிலர் பொங்கலோ பொங்கல் என்றும் குலவையிடுவர். படையில் போட்டு இறைவனை வழிப்பட்ட பின் பசு மாட்டினை கோவிலுக்கும், காளை மாட்டினை மஞ்சுவிரட்டுக்கும் அழைத்துச் செல்வர்.