தீபாவளி 2023 : மூன்று நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை!

Diwali 2023
Diwali 2023

தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து மெட்ரோ ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு ஏதுவாக மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை அறிவித்து உள்ளது. அதன் படி மாலை நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை நாளை (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 10.00 மணி வரை இயக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

ALSO READ : நாளை முதல் (09.11.2023) சிறப்பு பஸ்கள் இயக்கம்!

அதோடு இந்த மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் நெரிசல்மிகு நேரமான இரவு 08.00 மணி முதல் 10.00 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள இந்த மெட்ரோ ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அதோடு இந்த சேவை ஆனது நாளை (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் தான் என்பதையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெளிவாக கூறி உள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்