
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க சென்னை மாநகர காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதோடு பட்டாசுகளை கையில் வைத்து கொண்டு கொளுத்தி போடுவது பாதுகாப்பு இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகின்ற 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட சென்னை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு சில வழிமுறைகளை வழங்கி உள்ளது.
அதில் கூறப்பட்டதாவது:
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பசுமை பட்டாசுகளை 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும். அதாவது காலை 7 மணி முதல் 8 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்க வேண்டும்.
கார், பைக் போன்ற இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் நிற்கும் இடங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் அமைந்து உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
பட்டாசு விற்கும் கடைகளுக்கு பக்கத்தில் சென்று புகைப் பிடிக்கவோ, பட்டாசு வெடிக்கவோ கூடாது. அதோடு ஈரம் மிகுந்த பட்டாசுகளை சமையல் அறையில் உலர்த்த கூடாது.
ALSO READ : தங்கம் விலை இன்று ரூ.240 குறைஞ்சிடுச்சு
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் அவை மிரண்டு ஓடி நடந்து செல்பவர்கள் மீது முட்டி விபத்து ஏற்படும். எனவே அவைகள் அருகில் சென்று பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பட்டாசுகளை கையில் வைத்து கொண்டு கொளுத்தி போடுவது பாதுகாப்பு இல்லை. மேலும் இதனால் உடலில் அதிகளவு பாதிப்பு ஏற்படும். எனவே, கையில் வைத்து பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் பொது விபத்து ஏற்பட்டால் காவல்துறை அவசர உதவி எண் 100, தீயணைப்பு உதவி எண் 101, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, தேசிய உதவி எண் 112 ஆகிய எங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் தீக்காயத்தின் மீது தண்ணீர் ஊற்றுவதாலோ அல்லது தண்ணீருக்குள் கை கால்களை முக்குவதாலோ கூடாது. அவ்வாறு செய்தல் கொப்பளம் உண்டாகலாம். கொப்பளங்கள் ஏற்பட்டவுடன் பயப்படாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.