
பொதுவாக பண்டிகை காலங்களில் வெளியூர் மற்றும் வெளிமாநிலம் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்புவது வழக்கம். அதிலும் தீபாவளி பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடத்தான் ஆசைப்படுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டடப்பட உள்ளதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில், இந்த சிறப்பு பேருந்துகள் நாளை (நவம்பர் 9) முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் செல்ல இருப்பதால் சிறப்பு பேருந்துகள் நாளை முதல் 11 ஆம் தேதி வரை 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் வழக்கமாக 2,100 பேருந்துகள் இயக்கபடுகிறது. இந்நிலையில், இந்த மூன்று நாட்களும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1,365 பேருந்துகள் என மொத்தம் 4 ஆயிரத்து 675 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
ALSO READ : நடிகர் பிரித்விராஜ் நடித்த புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு! வைரலாகும் பிரித்விராஜ் – ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்!
தீபாவளி பண்டிகை வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் சிறப்பு பேருந்துகளில் செல்ல முன்கூட்டியே முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். அதன்படி, இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பண்டிகையொட்டி இயக்கப்படும் இந்த சிறப்பு பேருந்துகள் நாளை(வியாழக்கிழமை) முதல் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பஸ் நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.