
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் புத்தாடை வாங்கவும், பட்டாசுகள் வாங்கவும் கடை வீதிகளில் படையெடுத்து வருகின்றனர். இதனால், மதுரை மாசி கடைவீதி, சென்னை திநகர் போன்ற கடைவீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் இந்த தீபாவளி விடுமுறை மாற்ற வார விடுமுறைகளை போல் முடிந்து விடுமோ என்ற கவலை மாணவர்கள் மத்தியிலும், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
படிப்பு, வேலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு வசிப்பவர்கள் தீபாவளியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று சொந்த ஊர் திரும்புவார்கள். அதன்பின் தீபாவளி அன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவே அவர்கள் திரும்பவும் சொந்த ஊரிலிருந்து கிளம்பினால் மட்டுமே அடுத்த நாள் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல முடியும்.
ALSO READ : கெஜ்ரிவாலின் புதிய அறிவிப்பு! ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் @ குரூப் பி, குரூப் சி பணியாளர்களுக்கு…
இதனால் பலரும் தீபாவளியை கொண்டாட முடியாமல் போய்விடுகிறது. இது ஒருபுறம் இருக்க ஒரே நாளில் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வதால் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பல தரப்பினர் தீபாவளிக்கு அடுத்த நாளும் அதாவது திங்கட்கிழமையும் பொது விடுமுறையாக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் இதனால் மக்கள் எந்தவொரு சிரமமும் இன்றி தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் அதாவது திங்கட்கிழமை நாளும் பொது விடுமுறை அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு திங்கட்கிழமை அன்று பொது விடுமுறை அறிவிக்கும் பட்சத்தில் அன்றைய நாளுக்கு பதிலாக வேறொரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.