தீபாவளி 2023 : புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு! 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கணும்!

Diwali 2023 Time restriction for bursting firecrackers in Puducherry today news
Diwali 2023 News

தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்தது.

ALSO READ : கலைஞர் உரிமைத்தொகை திட்டம் – 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு!

இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, புதுச்சேரியில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது அதை தொரடர்ந்து தீபாவளி தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.

மேலும், தீபாவளியை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்