நீங்களும் ரேஷன் கடையில நீண்ட வரிசையில் நின்னு பொருள் வாங்குறீங்களா? இனி சிரமப்பட தேவையில்லை… ரேஷன் கடையில் வரபோகும் புதிய மாற்றம்!!

Do you also stand in a long queue at the ration shop No need to worry anymore a new change is coming in the ration shop for more details click here read it

தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகள் எப்பொழுதும் புது பொலிவு இல்லாமல் பழைய குடோன்கள் போல்தான் காட்சியளிப்பதாக மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு “நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை” என்ற புதிய முயற்சியை, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் சீரமைக்கப்பட்டு விரைவில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்க உள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல சாய்வுத்தள வசதி, முதியோர் அமர ஓய்விருக்கை போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளால் ரேஷன் கடைகளுக்கு வரும் பயனாளிகளும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN