உங்களுக்கும் அரசு வேலை வேண்டுமா? இனி கவலை வேண்டாம்..! அரசே அறிவித்த புதிய அறிவிப்பு உங்களுக்குத்தான்!!

Do you also want a government job Dont worry anymore The new notification announced by the government is for you full details here read it now and watch

தமிழ்நாடு அரசு வேலைக்காக போட்டியிடும் தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு வகையில் உதவிகளை செய்து செய்து வருகிறது. அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் ரயில்வே/வங்கி/எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரயில்வே/வங்கி/எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்ச்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் தகுதியுடைய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இலவச வகுப்புகள், தேர்வுகள், பாடப்புத்தகங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 150 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு:

தமிழக அரசு நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 ஆக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணபிக்க ஆரம்ப தேதி:

இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி 11.05.2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.05.2023.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://candidate.tnskill.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN