முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். மேலும், இந்த மகளிர் உரிமை திட்டம் ஆனது,” பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்” வகையில் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை கடந்த மாதம் 24 ஆம் தேதியில் தருமபுரி மாவடத்தில் தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து, விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடத்தப்பட்டன. அதன்படி, இதில் பதிவு செய்யாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மேலும், விண்ணபத்தில் ஏதேனும் பிழை அல்லது சந்தேகம் படும்படியாக இருந்தால் அதிகாரிகள் நேரடியாக குடம்ப தலைவிகளின் வீட்டிற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, பதிவு செய்தவர்களில் தற்போது வரையிலும் பல்வேறு குடும்பத் தலைவிகள் வங்கி கணக்கு எண்ணுடன் பான் மற்றும் ஆதார் இணைப்பு செய்யாமல் இருப்பதால் உடனடியாக அந்த பணிகளை முடிக்கும் படி அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தது.
Also Read : மாதம் ரூ.30,000 சம்பளத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழகம் புதியதோர் வேலை அறிவிப்பு! விண்ணப்பிக்க மறக்காதீங்க!