உங்க கிட்ட மொபைல் போன் இருக்கா? மத்திய அரசின் இந்த முக்கியமான செய்தி உங்களுக்குத்தான்..!

Do you have a mobile phone This important message of the central government is for you read it now this news announced for few minits

உலகமே டிஜிட்டல் முறையில் இயங்கி வரும் இந்த கால கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை உபயோகிக்க தொடங்கி விட்டனர். முன்பு பயன்புத்திய போன்களில் எப்எம் ரேடியோ வசதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் காலங்கள் கடந்து செல்ல மக்கள் அனைவரும் யூடியூப், இன்ச்டாகிராம் போன்ற பல்வேறு செயலிகளை பயன்படுத்துவதால் எப்எம் ரேடியோ வசதி தற்பொழுது எந்த ஒரு போன்களிலும் இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில், தற்பொழுது மத்திய அரசு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் எப்எம் ரேடியோ வசதி இருக்க வேண்டும் என்று மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் மிக எளிதாகவும் அவசர காலங்களிலும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கான உத்தரவை தகவல் தொடர்புத்துறை அமைச்சகமானது அனைத்து மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ளது. ஒருவேளை ஒரு நிறுவனத்தின் போனில் இந்த வசதி இல்லையெனில் அதனை பயன்படுத்தும் விதத்தில் அவர்கள் அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன்களில் எப்எம் ரேடியோ ரிசீவர் வசதியானது பயன்படுத்தப்படவில்லை என்றாலும் அதனை மாற்றியமைத்து எப்எம் வசதியை பொறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN