ரேஷன் கார்டு இருக்கா? ஆதார் கார்டு இருக்கா? இனி எந்த ரேசன் கடையில வேணாலும் பொருள் வாங்கிக்கிலாம்…!

0
Do you have a ration card Do you have aadhar card Now you can buy anything you want in this ration shop-Get Free Ration Through Aadhar Card

ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வாங்குவது வழக்கம். இந்நிலையில், தற்பொழுது UIDAI ரேஷன் கார்டு பற்றி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் மூலம் இலவச ரேஷன் பெறுவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த இலவச ரேசன் பெறுபவர்களுக்கு UIDAI ஒரு அறிவித்த அறிவிப்பின்படி, ஆதார் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த அறிவிப்பு உணர்த்தும். அந்த வகையில், இனி நீங்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ஆதார் மூலம் ரேஷன் பொருட்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலம் ரேசன் பொருட்களை பெரும் வசதியை செயல்படுத்த வேண்டும் என்றால் அதற்கு முதலில் ஆதார் கார்டை புதுபித்திருக்க வேண்டும். ரேஷன் கார்டு தொடர்பாக ஏதேனும் பிரச்னையோ அல்லது சந்தேகங்களோ இருந்தால் 1947 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் UIDAI டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, யோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 கிலோ கோதுமை மற்றும் 14 கிலோ அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம், பொதுவான ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2 கிலோ கோதுமை மற்றும் 3 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும். ஆனால், இம்முறை கார்டுதாரர்கள் கோதுமைக்கு கிலோ ரூ.2ம், அரிசிக்கு ரூ.3ம் கிடைக்கும்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here