உங்க கிட்ட ரேஷன் கார்டு இருக்கா? தமிழக அரசின் இந்த மகிழ்ச்சியான செய்தி உங்களுக்குத்தான்..!

Do you have a ration card This happy news from the Tamil Nadu government is for you dont miss it this news is for you read it today now

மக்கள் நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை மிக குறைந்த விலையில் வாங்குவதற்காக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தமிழக அரசு குடும்ப அட்டை அதாவது ரேஷன் கார்டை வழங்கியுள்ளது. இந்த ரேஷன் காட்டுகள் குடும்பத்தின் வருமானத்தை பொறுத்து 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கோ, அல்லது ரேஷன் கார்டுகளில் உள்ள பெயர்களை நீக்கவோ அல்லது வேறு ஒரு பெயரை சேர்ப்பதற்காகவோ அருகில் இருக்கும் தாலுகா அலுவலகம் சென்று அங்கு விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது.

இந்த பணிக்காக மக்கள் இனி இவ்வளவு சிரமப்பட தேவையில்லை. ஒவ்வொரு மாவட்ட வாரியாக ரேஷன் கார்டுகளில் உள்ள பிழை திருத்துதல், புதிதாக பெயர் சேர்த்தல், ஏற்கனவே உள்ள பெயரை நீக்குதல் போன்றவற்றை செய்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மக்கள் சுலபமாக ரேஷன் கார்டை புதுபித்து கொள்ளலாம்.

அந்த வகையில், தற்பொழுது தமிழக அரசு இந்த சிறப்பு முகாமை சென்னையில் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகங்களில் மே 13 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற இருக்கிறது. ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யும் நபர்கள் இந்த சிறப்பு முகாம்கள் மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN