நீங்க ஆதார் வச்சிருக்கீங்களா? பான் கார்டு வச்சிருக்கீங்களா? இல்ல ரெண்டுமே இருக்கா? ஷாக்கிங் நியூஸ் உங்களுக்குத்தான்!

மக்கள் அனைவரும் ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்க சொல்லி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு கொண்டே தான் இருக்கிறது. சிலர் இணைத்து விட்டார்கள்… சிலர் இன்னும் இணைக்கவில்லை… இந்த இணைப்புக்காக கால அவகாசம் நீட்டித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் ஜுன் மாதம் 30 தேதி வரை தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார்-பான் இணைப்புக்கான கடைசி தேதியை தொடர்ந்து நீட்டித்து வரும் மத்திய அரசு இப்போது கால அவகாசத்தை நீட்டியுள்ளது. அதேசமயம், ஆதார்-பான் இணைப்புக்கு ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ஏற்கனவே ஆதார்-பான் இணைப்புக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போதைய அவகாசமும் முடிந்துவிட்டால் அபராத தொகை மேலும் உயரும்’ என்று எச்சரித்துள்ளார். மக்கள் அனைவரும் தவறாமல் உங்கள் ஆதார் கார்டையும்-பான் கார்டையும் ஜுன் மாதம் 30 ஆம் தேதிக்குள் இணைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் அபராத தொகை கட்ட வேண்டியிருக்கும் மக்களே!

Do you have Aadhaar Do you have PAN card Or are there both Shocking news for you!

RECENT POSTS IN JOBSTAMIL.IN