இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டைதான். இந்த ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த வங்கி எண், பான் எண், ரேஷன் எண் என அனைத்து ஆவணங்களிலும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் நடைபெறும் வங்கி தொடர்பான மோசடிகள், ரேஷன் கடைகளில் ஏற்படும் மோசடிகள் என பல்வேறு வகையான மோசடிகளை தடுக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆதார் கார்டை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதுபிக்காதவர்கள் புதுப்பிக்கலாம் என்று UIDAI தெரிவித்தது. இதுபோன்று ஆதார் கார்டை புதுபிக்க தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வாட்ஸ் மூலமாகவோ பகிர வேண்டாம் என்று UIDAI அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்று பகிரும் பட்சத்தில் பல மோசடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
Also Read : சென்னை வாசிகளே உஷாரா இருங்க… இனி இந்த ரூட்ல போக முடியாதாம்..! நெடுஞ்சாலைதுறையின் அதிரடி நடவடிக்கை!!
மேலும், பொதுமக்கள் ஆதார் கார்டை புதுபிக்க நினைத்தால் ஆன்லைன் மூலமாகவும் அல்லது அருகில் உள்ள ஆதார் சேவை மையங்கள் மூலமகாவும் புதுப்பித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஆதார் கார்டை இதுவரை புதுபிக்க்காதவர்கள் வருகிற செப்டம்பர்14 ஆம் தேதி வரை புதுப்பித்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.