தனியார் வங்கிகளில் ஒன்றான DCB எனப்படும் வங்கியானது பிரபலமான முன்னணி வங்கிகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இதனையடுத்து இவ்வங்கியானது மகிழ்ச்சியான 2 வித அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
அதாவது DCB வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுடைய வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. அதாவது ரூ. 2 கோடி வரை உள்ள எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்களை சமீபதத்தில் உயர்த்தியுள்ளது. இதன் மூலமாக வழக்கமான வாடிக்கையாளர்கள் 8 சதவீதமும் மூத்த குடிமக்கள் 8.5 சதவீதமுமாக வட்டி விகிதங்களைப் பெற முடியும். மேலும் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த மே-8 ஆம் தேதியிலிருந்து அமலில் இருப்பதாக DCB வங்கியினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட DCB வங்கியினுடைய இந்த வட்டி விகிதமானது HDFC மற்றும் SBI போன்ற பிரபல வங்கிகளின் வட்டி விகிதங்களை விட அதிக வட்டி ஆகும். இதனால் DCB வங்கியினுடைய இந்த நடைமுறையானது இந்த வங்கிகளில் பணத்தை சேமிக்க நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை உருவாக்கித் தருகின்றது.
அதுமட்டுமல்லாமல் DCB வங்கியினுடைய அதிகரிப்பட்டுள்ள FD குறித்த வட்டி விகிதங்களின் விவரங்களாவது :
- 3.75% வட்டி – 7 லிளிருந்து 45 நாட்கள்
- 4% வட்டி – 46 லிருந்து 90 நாட்கள்
- 4.75% வட்டி – 91 நாட்களிலிருந்து 6 மாதங்கள்
- 6.25% வட்டி – 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள்
- 7.25% வட்டி – மாதங்கள் முதல் 12 மாதங்கள்
- 7.50% – 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள்
- 7.75% வட்டி – 18 மாதங்கள் முதல் 700 நாட்களுக்கு குறைவாக
- 8% வட்டி -7 00 நாட்கள் முதல் 36 மாதங்கள் வரை
- 7.75% வட்டி – 36 மாதங்களுக்கு மேல் அதாவது 120 மாதங்கள் வரையும் வழங்கப்படுகின்றது.
இதே போல சேமிப்புக் கணக்குகளிலும் அந்தந்த தொகைக்கு ஏற்றார் போல் வட்டி விகிதமானது அளிக்கப்படுகின்றது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!