பான்கார்டு, ஆதார்கார்டு வச்சிருக்கிங்களா? அப்ப உடனே இத பண்ணுங்க.. இல்லைனா செல்லாதாம்..!

Do you have bank card and aadhaar card Then do this immediately.. otherwise it will not work-To Link Aadhar And Pan Card

பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. பான் கார்டு மட்டும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன் இணைப்பதற்கான காலக்கெடு வருகிற மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, பான் எண்ணுடன் ஆதாரை காலக்கெடு முடிவதற்குள் இணைக்காதவர்களின் பான் கார்டுகள் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டு செல்லாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பான்கார்டு செயல் இழந்து விட்டால் அவர்களால் வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை திரும்பப்பெற முடியாது, பணத்தை திரும்ப பெறக்கோரி விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here