உங்க கிட்ட டுவிட்டர் இருக்கா? புது அப்டேட் ஒன்னு வந்திருக்கு..! எலான் மஸ்க்கின் அட்டகாசமான அறிவிப்பு உங்களுக்குத்தான்!!

Do you have Twitter A new update has arrived Elon Musks Exciting Announcement released just now reat it

இன்று உலகம் முழுவதும் உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் உலக பணக்காரர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்ற செயலி என்றால் அது ட்விட்டர் செயலி தான். அந்த அளவிற்கு ட்விட்டர் செயலி மிகவும் பிரபலமான செயலியாக காணப்படுகிறது.

இந்த நிலையில் எலான் மஸ்க் என்பவர் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார். அதாவது அவர் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தின்போது இதை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாக கூறபடுகிறது. எலான் மஸ்க் உலக பணக்கரார்களில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அவர் பல்வேறு புதிய அம்சங்களை ட்விட்டரில் புகுத்திக் கொண்டே இருக்கிறார். மேலும் அவர் “ட்விட்டர் 2.0 தி எவ்ரிதிங் ஆப்” என்கிற திட்டங்களை கடந்த வருடம் வெளியிட்டார். அதில் புதிய சிறப்பு அம்சங்களாக நீண்ட வடிவ ட்வீட்கள், பணம் செலுத்துதல் மற்றும் என்கிரிப்டட் நேரடி செய்திகள்(DMs) போன்றவைகள் காணப்படும் என்றார். அதுமட்டுமல்லாது இவ்வசதிகள் அதிக பாதுகாப்பு தன்மையுடனும் பெரியளவு உதவியாகவும் ட்விட்டர் பயனர்களுக்கு காணப்படும். தொடர்ந்து வீடியோ மற்றும் ஆடியோ கால் மற்றும் அதனை சாட் செய்யும் புதிய வசதியை ட்விட்டரில் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார். அதனையடுத்து எலான் மஸ்க் இவ்வகையான புதிய அம்சங்களினால் உலகின் எந்த ஒரு மூலையிலிருந்தாலும் ஒருவருடன் எந்த தொலைபேசி எண்ணும் இல்லாமல் மிக எளிமையாக பேச முடியும்” என்று ஒரு ட்வீட்டின்போது தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது இன்ஸ்டாக்ராம் மற்றும் பேஸ்புக் ஆகியவைகளின் ஒரே அம்சங்களை கொண்டதாக ட்விட்டரில் உள்ள அழைப்பு அம்சம் காணப்படும். இதே போன்று மேலும் பல அம்சங்களை எலான் மஸ்க் அவர்கள் ட்விட்டரில் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN