1000 ரன்களை அடித்த வீரர் யாருன்னு தெரியுமா? புதிய சாதனையால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Do you know the player who scored 1000 runs Fans are happy with the new record-Devon Conway Reached Fastest 1000 Runs

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நியூசிலாந்தின் கிரிக்கெட் வீரரான டெவோன் கான்வே 1,000 டெஸ்ட் ரன்களை அடித்தார். இதுவரை நடைபெற்ற டெஸ்ட்டில் இவ்வளவு ரன்களை அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த பெருமையை கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்குகிடையே நடைபெற்ற ஆட்டத்தில் கான்வே இத்தகைய சாதனையை படைத்தார்.

இந்நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் கான்வே மொத்தம் 156 பந்துகளில் 82 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் மொத்தமாக மூன்று சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அவரது சிறந்த ஸ்கோர் 200 ஆகும். 20 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த நியூஸிலாந்தின் முன்னாள் வீரர் ஜான் ரீடின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் டெஸ்ட் வடிவத்தில் ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பாக்கிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் (161), ஆகா சல்மான் (103), சர்பராஸ் அகமது (86) ஆகியோர் பேட்டிங்கில் பிரகாசித்தனர். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களாக டிம் சவுத்தி (3/69) பவுலிங்கில் அசத்தினார். அஜாஸ் படேல், இஷ் சோதி மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரும் இரண்டு விக்கெட்களை எடுத்தனர்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here